-->

Ticker

Header Ads Widget

கர்த்தரின் கிரியை- தமிழ் கிறிஸ்தவ கதை

 கர்த்தரின் கிரியை - கிறிஸ்தவ கதை

உணவு வகைகளை விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்தது. அங்கே உணவை அழகாய் மடிக்க அழகான அலுமினியத் தாளைப் பயன்படுத்து ஆரம்பித்த சமயம் அது. அதன் பளபளப்பு , உணவின் சுவைக்கு மேலும் மெருகூட்டக் கூடியதாக இருந்தது . பலரும் அதை விரும்பினார்கள்.

தனக்கு இருந்த வரவேற்பு அலுமினியத்தாளுக்கு மிகவும் பெருமையைக் கொடுத்தது. உணவை வாங்குபவர்கள் தனக்காகத்தான் வாங்குகிறார்கள் என்று நம்பத்தொடங்கியது.

ஒரு பெண்மணி கடைக்கு வந்து உணவு வாங்கினார். அவர் வாங்கிய உணவுப் பொருட்களெல்லாம் அதிலேயே வைத்துக் கட்டப்பட்டன. அவர் பணத்தைக் கொடுத்து வாங்கும் போது காகிதம் தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

” எத்தனை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்னை ? நான் மதிப்பு மிக்கவன்தான் “.

வாங்கிக் கொண்டு வந்த பெண்மணி பொட்டலத்தை உணவு மேஜையில் வைத்து விட்டுத் தட்டு எடுத்து வரப் போனார்.

“அட டா . என்னுடைய கவர்ச்சி என்னை எங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது பார்” என்று மீண்டும் தனக்குள் பெருமையாய் எண்ணிக் கொண்டது காகிதம் .

போன பெண்மணி தட்டையும் , பாத்திரத்தை எடுத்து வந்தார். பொட்டலத்தில் இருந்த சகலத்தையும் பாத்திரங்களுக்கு மாற்றினார். காகிதத்தை சுத்தமாய் வழித்தெடுத்து விட்டுக் காகிதத்தை சுருட்டிக் குப்பையில் வீசினார். நாறிப் போன உணவுத்துணிக்கைகளோடும் , அசிங்கம் பிடித்த குப்பைகளோடும் அவமானத்துடன் கிடக்கும்போதுதான் காகிதத்துக்குப் புரிந்தது தனக்குக் கிடைத்த மரியாதையெல்லாம் தனக்கு சொந்தமல்ல , அது தனக்குள் வைக்கப்பட்டிருந்த பொருளுக்கு சொந்தமானது என்று.



செல்லமே! கர்த்தர் நம்மைக் கொண்டு எத்தனையோ அற்புதங்களை நடப்பிக்கிறார். எத்தனையோ திறமைகளை, வரங்களை நமக்குத் தந்து நம்மைக் காணவும் பலரை நாடி வரும்படி செய்கிறார். ஒன்றுமில்லாத நமக்குள் அவர்தான் பெருமை தரும் காரியங்களை நிரப்புகிறார் என்பதை உணர்ந்தால் தலைக்கணம் எங்காவது தலையெடுக்க முடியுமா?


” இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை “.

ஏசாயா 64: 8

கருத்துரையிடுக

0 கருத்துகள்